முன்னாள் நிதித்துறைச் செயலாளர் அரவிந்த் மாயாராம் வீடு மற்றும் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இங்கிலாந்து நிறுவனத்திடமிருந்து ரூபாய் நோட்டுகளுக்கான பாதுகாப்பு இழைகளை கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
காலாவதியான இங்கிலாந்து நிறுவனத்தின் ஒப்பந்தத்தை மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டித்து அரவிந்த் மாயாராம் உத்தரவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அரவிந்த் மாயாராம் தற்போது ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் அரசியல் ஆலோசகராக உள்ளார்.