பிரான்ஸில் சலவை இயந்திரத்தில் கிடந்த 3 வயது சிறுமி! தீவிர முயற்சிக்கு பிறகு நேர்ந்த பரிதாபம்


பிரான்ஸ் நகரமான பாரிஸில் சலவை இயந்திரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சலவை இயந்திரத்தில் சிறுமி

பிரான்ஸில் தந்தை ஒருவர் தனது மகளை காணவில்லை என்று தெரிவித்து தீவிரமாக தேடி வந்த நிலையில், பாரிஸ் நகரில் சலவை இயந்திரம் ஒன்றில் மூன்று வயது சிறுமி அடைக்கப்பட்டு இருந்தது கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சலவை இயந்திரத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி, தீவிர அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் இறந்து விட்டதாக இரவு 11:30 மணிக்குப் பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் சலவை இயந்திரத்தில் கிடந்த 3 வயது சிறுமி! தீவிர முயற்சிக்கு பிறகு நேர்ந்த பரிதாபம் | Girl 3 Die After Found In Washing Machine In Paris

இதற்கிடையில் வியாழன் இரவு வடகிழக்கு பாரிஸில் குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், இறப்புக்கான காரணம் குறித்த விசாரணை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது என்று பாரிஸ் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இரவு 10.30 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் குழந்தை கண்டெடுக்கப்பட்ட போது, உடல்நிலை ஏற்கனவே ஆபத்தான நிலையில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸில் சலவை இயந்திரத்தில் கிடந்த 3 வயது சிறுமி! தீவிர முயற்சிக்கு பிறகு நேர்ந்த பரிதாபம் | Girl 3 Die After Found In Washing Machine In Paris

மேலும் உயிரிழந்த சிறுமியின் உடலுக்கு பிரேதப் பரிசோதனை இன்னும் நடைபெறவில்லை.

48 வயதான தந்தை மற்றும் 37 வயதான மனைவி ஆகியோரின் மூன்று வயது குழந்தை சலவை இயந்திரத்தில் அடைக்கப்பட்டு உயிரிழந்து இருப்பது அருகில் உள்ளவர்கள் அனைவர் மத்தியிலும் வருத்ததை ஏற்படுத்தியுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.