காஞ்சிபுரத்தில் காதலனுடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை பட்டாக் கத்தியால் தாக்கி கூட்டுப் பாலியல்பலாத்காரம் செய்த வழக்கில் 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். தறிகெட்டு திரிந்த அவர்களின் கால்களுக்கும், தேவையில்லாமல் நீண்ட கைகளுக்கும் மாவுக்கட்டு..
டெல்லியில் ஓடும் பேருந்தில் காதலனுடன் பேசிக் கொண்டிருந்த மாணவி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியது.
அதற்கு இணையான பயங்கர சம்பவம் ஒன்று காஞ்சிபுரத்தில் அரங்கேறி உள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு குண்டுப்பள்ளம் பகுதியில் சாலையோரம் உள்ள வயல்காட்டில் உள்ள மரத்துக்கடியில் மாலை நேரத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தனது காதலனுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இருட்ட தொடங்கிய பின்னரும் அவர்கள் வெளியே வராமல் தனிமையில் இருப்பதை அந்தப்பகுதியை சேர்ந்த போதை கூட்டாளிகள் 5 பேர் கண்டுள்ளனர்.
இருட்டுக்குள் இருந்த அந்த காதல்ஜோடியை பட்டாக்கத்தியை காட்டி தாக்கியும், மிரட்டியும், அங்கிருந்து அரைகிலோ மீட்டர் தூரம் கருவேலங் காட்டுக்குள் இழுத்துச் சென்றுள்ளனர்.
காதலன் முன்பு அந்த மாணவியின் கழுத்தில் கத்தியை வைத்து 5 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதோடு அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக யாரிடமும் சொல்லக்கூடாது என்று கத்தியால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்று உள்ளனர்.
காயங்களுடன் அங்கிருந்து வெளியே வந்த காதல் ஜோடி, தங்களுக்கு நடந்த கொடுமை குறித்து போலீசில் புகார் அளித்தனர்.
அந்த காமுகர்களை பிடிக்க அந்தப்பகுதி முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அந்த காட்டுக்குள் மாடு மேய்க்கும் தென்னரசு என்பவனின் போதைக்கூட்டாளிகள் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவன் கொடுத்த தகவலின் பேரில் செவிலிமேடு மணிகண்டன், வளர்புரம் விக்னேஷ், சிவக்குமார் ,விப்பேடு விமல்குமார், ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடினர்.
ஒரு இடத்தில் இந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்ததாகவும், போலீசுக்கு பயந்து இரு சக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற கும்பல் சாலையில் சறுக்கி விழுந்து கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்
போதையில் தறிக்கெட்டு திரிந்த காமுகர்களின் கால்களுக்கும், பெண்ணிடம் எல்லைமீறிய கைகளுக்கும் போலீசார் பக்குவமாக மாவுக்கட்டு போட்டு விட்டனர்.
படிக்கின்ற காலத்தில் தடம் மாறும் காதல் ஜோடிகள் காதலை வளர்ப்பதற்காக இருள் சூழ்ந்த இடம் தேடிச்சென்றால் என்ன மாதிரியான விபரீதங்கள் அரங்கேறும் என்பதற்கு இந்த சம்பவம் மற்றும் ஒரு சாட்சியாகி இருக்கின்றது