மெக்சிகோவில் 20 வயதான இளம் மாணவி ஒருவர், தான் தங்கியிருந்த அறையின் பால்கனியில் இருந்து திகிலான முறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளம் மாணவி உயிரிழப்பு
மெக்சிகோவின் கான்கன்(Cancun) நகரில் உள்ள வாடகை சொத்து ஒன்றில் வசித்து வரும் லியா பியர்ஸ்(20) என்ற இளம் செவிலியர் மாணவி, அறையின் கதவை தவறுதலாக பூட்டிக் கொண்டுள்ளார்.
இதனால் அறைக்குள் செல்ல முடியாமல் தவித்த லியா பியர்ஸ்(20), இறுதியாக வெளியே மூன்றாவது மாடி பால்கனி வழியாக உள்ளே திரும்ப முயன்றுள்ளார்.
அப்போது இளம் மாணவி லியா பியர்ஸ் தான் தங்கியிருந்த Airbnb விடுதியின் பால்கனியில் இருந்து பயங்கரமான முறையில் தவறி விழுந்துள்ளார்.
மருத்துவமனைக்கு எடுத்த செல்ல முயற்சித்த போது, அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டது.
மாணவி லியா பியர்ஸின்(Leah Pearse) இந்த சோகமான முடிவு அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காதலன் கைது
செவிலியர் மாணவி பால்கனியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததை தொடர்ந்து முதலில் அவளது 21 வயது காதலன் அகஸ்டின் ராபர்ட் ஆஃப்டர்ஹைட் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டார்.
ஆனால் விசாரணையின் முடிவில் லியா பியர்ஸின் மரணம் என்பது பயங்கரமான விபத்து என்று தெளிவாக தெரிந்த பின்னர் விடுவிக்கப்பட்டார்.