புதுடெல்லி: செகந்திராபாத் – விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடங்க உள்ளது. இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டின் 8வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி நாளை செகந்திராபாத்-விசாகப்பட்டிணம் நகரங்களுக்கு இடையே காலை 10.30 மணிக்குத் தொடங்கி வைக்க உள்ளார். தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் விதத்தில் 700கி.மீ தொலைவைக் கடக்கும் வகையில் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இருக்கும். இந்த ரயில் செகந்திராபாத்தில் […]
