நேபாளத்தில் விமான விபத்து ; 68 பேர் கதி என்ன ? | Plane with 68 passengers onboard crashes near Nepal’s Pokhara airport

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கி பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பொக்காரா விமான நிலையத்தில் இருந்து இன்று (ஜன.,15) கிளம்பிய விமானத்தில் 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் என 72 பேர் இருந்துள்ளனர்.

latest tamil news

காத்மாண்டுவில் இருந்து விமானம், பொக்காரா சென்றதாக தெரிகிறது. விமானம் ஓடு தளத்தில் இருந்து விலகி சென்றதால் தீ பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

latest tamil news

இதுவரை 16 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.