கடல் அன்னைக்கு பொங்கல் வைத்து நன்றி கூறிய சிறுமிகள்

உலக இந்துக்களால் வருட தொடக்கத்தில் கொண்டாடப்படும் பண்டிகையே தைப்பொங்கல் ஆகும். அந்த வகையில், இந்த ஆண்டான 2023 ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகும். சூரியன் தனுசு ராசியில் தனது பயணத்தை முடித்து, மகர ராசியில் பயணிக்க துவங்குதையே தை மாதப் பிறப்பு என்கிறோம். இதையே மற்ற மாநிலத்தவர்கள் மகர சங்கராந்தி என்ற பெயரில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக கொண்டாடுகிறார்கள்.

இந்த நிலையில் நாடு முழுவாதும் இன்று கோலாகலமாக பொங்கல் பாண்டிக்கை கொண்டாடப் பட்டு வருகின்றது. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா உப்பூர் அருகே உள்ள மோர்பண்ணை கிராமத்தில் மீனவ மக்கள் அதிகமாக குடியிருந்து வருகின்றனர்.

இவர்கள் கடல் அன்னைக்கு கிராமத்தின் சார்பில் கிராம தலைவர் தலைமையில் ஊரின் நடுவே அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ ரணபத்ரகாளியம்மன் ஆலயத்தின் முன்பாக சப்த கன்னிகள் (ஊரில் உள்ள 7 பெண் குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு) அந்த சப்த கன்னிகளின் மூலம் ரணபத்ரகாளியம்மன் கோவில் முன்பாக பொங்கல் வைக்கப்பட்டு அதன்பின்னர் ஊர் காவல் தெய்வமான முனியய்யா கோயிலில் ஊர்வலமாக சென்று வழிபட்டு அங்கிருந்து ரண பத்திரகாளியம்மன் கோவிலுக்கு வந்து சாமிகளுக்கு பொங்கல் படையலிட்டு, கோவிலில் வைத்திருந்த கும்பங்களை சப்தகன்னிகள் எடுத்து தலையில் சுமந்து கோவிலை சுற்றி ஊர்வலமாக கடற்கரையை வந்தடைந்தனர்.

சிறிய படகு ஒன்றை ஊர் தலைவர் சுமந்துவர அதன்பின்பு சப்தகன்னிகள் கும்ப நீரை சுமந்து கடற்கரை வந்தடைந்து கடற்கரையில் சில சாஸ்திரங்கள் செய்து அனைத்தையும் கடல் அன்னைக்கு சமர்ப்பித்து விட்டு திரும்பினர். இதுவும் ஒரு வகையில் கடல் அன்னைக்கு பொங்கலிட்டு படைப்பதாகவே கருதப்படுகிறது. இந்த நடைமுறை நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்து இங்கு தொடர்ந்து செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.