நித்தியானந்தா தனது சீடர்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாலியல் வழக்கு, கடத்தல், மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் சாமியார் நித்யானந்தா, 2019-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து தலைமறைவானார். இந்துக்களுக்கு என தனி கைலாசா நாடு ஒன்றை உருவாக்கிவிட்டதாக பிரகடனபடுத்திய அவரை போலீசார் தேடி வரும் நிலையில், அவர் எங்கிருக்கிறார் என இதுவரை கண்டறிய முடியவில்லை.
அவ்வப்போது பக்தர்களுக்கு சத்சங்கம் என்ற பெயரில் ஆன்மிக சொற்பொழிவுகளை சமூக வலைதளங்களின் மூலமாக ஆற்றி வருகிறார். இந்த நிலையில் அவர், கடந்த சில வாரங்களாக செயல்படாமல் இருந்தார். இதனால் அவருக்கு கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், சிலர் அவர் மரணமடைந்து விட்டதாகவும் வதந்திகள் கிளப்பி வந்தனர். அவற்றிற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அவரே கைப்பட எழுதிய கடிதம் ஒன்றினை வெளியிட்டார்.
Celebrate Pongal with the SPH Nithyananda Paramashivam! #Pongal #Tamil #MakarSankranti #लोहड़ी #Uttarayan pic.twitter.com/Ou0sfGqIMM
— KAILASA’s SPH Nithyananda (@SriNithyananda) January 13, 2023
இந்த நிலையில், நித்தியானந்தா தனது சீடர்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், காரில் வந்து இறங்கும் நித்தியானந்தா தனது சீடர்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்து கொண்டாடுகிறார். இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் தெரியவில்லை.