மதுரை: மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று நடைப்பெற்று வம் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் செய்த 11 மாடுபிடி வீரர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மதியம் நடைபெற்ற போட்டியில் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கலையொட்டி, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. உலகபிரசித்தி பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்த இந்த போட்டி காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. […]
