பிரித்தானியாவிலேயே கையில் அதிக ரொக்கம் வைத்திருப்பவர்கள் இவர்கள்தான்…


பிரித்தானியாவிலேயே கையில் அதிக ரொக்கம் வைத்திருப்பவர்கள் வட அயர்லாந்துக்காரர்கள்தானாம்.

ஏடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ள தகவல்

மக்கள் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பதை அடிப்படையாக வைத்து பிரித்தானியாவிலேயே கையில் அதிக ரொக்கம் வைத்திருப்பவர்கள் யார் என்பதைக் குறித்த தகவலை Link என்னும் ஏடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வட அயர்லாந்து நாட்டவர்கள் 2022இல் சராசரியாக 2,266 பவுண்டுகள் ஏடிஎம் இயந்திரங்களில் எடுத்துள்ளார்கள்.

பிரித்தானியாவிலேயே கையில் அதிக ரொக்கம் வைத்திருப்பவர்கள் இவர்கள்தான்... | Northern Ireland Most Cash Heavy Part Of Uk

2021இல் அது 2,070 பவுண்டுகளாக இருந்தது. ஆனால், 2020இல் இன்னும் கூடுதலாக 2,931 பவுண்டுகளாக இருந்துள்ளது.

மொத்த பிரித்தானியாவில் என்று பார்க்கும்போது மக்கள் சராசரியாக ஏடிஎம் இயந்திரங்களில் எடுத்துள்ள தொகை 1,564 பவுண்டுகள் மட்டுமே, இது 2022 நிலவரம்.

பல ஆண்டுகளாகவே வட அயர்லாந்துக்காரர்கள் இப்படி ரொக்கமாக பணம் எடுத்துத்தான் பயன்படுத்திவருகிறார்களாம்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.