சென்னை விமான நிலையத்தக்கு வந்த பாங்காக் விமானத்தில் வந்த பயணிகளிடம் ரூ.53 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நேற்று சென்னை விமான நிலையத்தக்கு வந்த பாங்காக் விமானத்தில் சட்டவிரோதமாக தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில், ஒரு பெண் பயணியை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்திய பெண் அதிகாரிகள், அந்த பெண் பயணி உள்ளாடைக்குள் மறைத்து வைத்து 192 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரிந்தது. தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல், கொழும்புவில் இருந்து சென்னைக்கு வந்த இரு பயணிகள் விமானங்களில் பயணம் செய்த இரு பெண் பயணிகளிடம் இருந்து 837 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மொத்தமாக நேற்று இரவு மட்டும் மூன்று பெண் பயணிகளிடம் இருந்து ரூ.53 லட்சம் மதிப்புள்ள, 1029 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.