நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பற்றி மருமகன் அதிர்ச்சி தகவல்!


நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இரண்டாவது திருமணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் பதுங்கி வாழும் தாவூத் இப்ராஹிம்

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்துவருகிறார். ஆனால், இதனை பாகிஸ்தான் மறுத்து வருகிறது.

இந்நிலையில், தாவூத் இப்ராஹிம் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே, பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்துள்ளதாக, அவரது மருமகன் தெரிவித்துள்ளார்.

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பற்றி மருமகன் அதிர்ச்சி தகவல்! | Dawood Ibrahim Married Second Time Pakistan Nephew

தாவூத் இப்ராஹிமின் மருமகன் அதிர்ச்சி தகவல்

இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பிடம் (NIA), தாவூத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனா பார்கரின் மகன் அலிஷா பார்கர் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்களை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே, மைஸாபின் என்பவருடன் தாவூத் இப்ராஹிமுக்கு திருமணமான நிலையில், பாகிஸ்தானின் பதான் சமூகத்தைச் சேர்ந்த வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவதாகத அலிஷா கூறியுள்ளார்.

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பற்றி மருமகன் அதிர்ச்சி தகவல்! | Dawood Ibrahim Married Second Time Pakistan Nephew

மேலும், தாவூத் இப்ராஹிமின் முதல் மனைவியை ஜூலை 2022-ல் துபாயில் சந்தித்ததாகவும், அவர் வாட்ஸ் ஆப் அழைப்புகள் மூலம், தொடர்ந்து குடும்பத்தினருடன் பேசிவருவதாகவும் அலிஷா தெரிவித்துள்ளார்.

கராச்சி நகரில் மற்றொரு பாதுகாப்பான இடத்துக்கு தாவூத் இப்ராஹிம் குடிபெயர்ந்துள்ளதாகவும் அலிஷா தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.