விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் இன்று மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை துவங்கி வைக்க இன்று மதுரை வந்தடைந்தார்.
அப்போது, மதுரையில் இருக்கும் தனது பெரியப்பா மு.க அழகிரியை சந்தித்து ஆசி பெற்றார். உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு வருகையில் வரவேற்க வீட்டு வாசலிலேயே அழகிரி காத்திருந்தார். தம்பி மகனை கண்டதும் இருவரும் கட்டி தழுவி அன்பை பரிமாறிக் கொண்ட புகைப்படம் திமுகவினரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.
இதன் பின் அலங்காநல்லூர் சென்ற உதயநிதி ஸ்டாலின் அங்கு நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டியை துவங்கி வைத்தார்.
இந்த நிலையில் போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு பரிசளிக்க மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படம் பொறித்த தங்க மோதிரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இது குறித்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.