பெண்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கில் 94வது வயதில் ஆரம்ப பள்ளியில் சேர்ந்து கற்கத் தொடங்கிய பிரிசில்லா சிட்டினேய் கடந்த ஆண்டு நவம்பரில் காலாமானார்.
பெண்கள் கல்வி விழிப்புணர்வு
கென்யா நாட்டை சேர்ந்த பிரிசில்லா சிட்டினேய் என்ற பெண் தங்கள் நாட்டு பெண்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்த தனது 94 வயதில் ஆரம்ப பள்ளியில் சேர்ந்து கல்வி கற்கத் தொடங்கினார்.
உலகின் மிக வயதான ஆரம்பப் பள்ளி மாணவியாக அறியப்பட்ட இவர், உள்ளூர் பகுதி மக்களால் கோகோ என்று அழைக்கப்பட்டார்.
REUTERS/Monicah Mwangi)
94 வயது மூதாட்டி ஒருவர் ஆர்வமுடன் கல்வி கற்கும் செய்தி அந்த நாடு முழுவதும் பரவி கல்வியில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி இருந்தது, அத்துடன் மூதாட்டியின் செயலால் நாட்டின் பள்ளிகளில் சேர்க்கை அதிகரித்ததை தொடர்ந்து இது கென்யா நாட்டில் ஒரு மெளனப் புரட்சியாக பார்க்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் 99வது வயதை அடைந்த பிரிசில்லா சிட்டினேய் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் உயிரிழந்தார்.
யுனஸ்கோவிற்கு அளித்த பேட்டி
94 நான்கு வயதில் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்கத் தொடங்கியது குறித்து பிரிசில்லா சிட்டினேய் யுனஸ்கோவிற்கு அளித்த பேட்டியில், தனது பகுதியில் உள்ள அனைத்து பெண்களுக்கும் முன் மாதிரியாக திகழ விரும்பினேன், அதனால் என்னுடைய 94 வயதில் அருகே உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியரை சந்தித்து நான் கல்வி கற்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தேன்.
REUTERS/Monicah Mwangi)
எனது ஆர்வத்தை பார்த்த தலைமை ஆசிரியர் என்னை பள்ளியில் சேர்த்து கொண்டார்.
என்னுடைய இந்த முயற்சியை குறிப்பாக இளம் வயதிலேயே திருமணம் ஆகும் பெண்களின் கல்வி கற்கும் நிலையை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் செய்தேன்.
ஏனெனில் கல்வி இல்லை என்றால் நமக்கும் விலங்குகளுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லாமல் போகிவிடும், கல்வி தான் எதிர்காலம் கல்வி ஒன்று தான் வாழ்க்கை முழுவதும் உடன் வரும் என்றும் தெரிவித்துள்ளார்.