முதியவரை ஸ்கூட்டரில் தரதரவென்று இழுத்து சென்ற இளைஞர்: ஆத்திரமூட்டும் வீடியோ


இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூரு மகுடி சாலையில் ஸ்கூட்டர் ஓட்டிச் சென்ற இளைஞர் ஒருவர், முதியவர் ஒருவரை வாகனத்தின் பின்புறமாக ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இளைஞரின் இரக்கமற்ற செயல்

கர்நாடக மாநிலம் பெங்களூரு மகுடி சாலையில் சென்ற இளைஞர் ஒருவர் விஜய்ப்போர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்தப்பா(55) என்ற நபரை ஸ்கூட்டரின் பின்பக்கம் இருந்து ஒரு கிலோ மீட்டர் வரை தரதரவென்று இழுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பகீர் சம்பவத்திற்கு முன்னதாக, முத்தப்பா(55) ஓட்டி வந்த காரின் மீது ஸ்கூட்டி ஓட்டி வந்த இளைஞர் மோதியுள்ளார். 

அப்போது காரின் மீது மோதிய இளைஞரை நிற்க சொல்லி முதியவர் காரில் இருந்து இறங்கி உள்ளார், ஆனால் அந்த இளைஞர் நிற்காமல் தப்பிச் செல்லவே, அவரை பிடிக்க முயன்று ஸ்கூட்டரின் பின்புறத்தை அந்த முதியவர் இறுக்க பிடித்துள்ளார்.

ஆனால் அதை பொருட்படுத்தாத அந்த இளைஞர் ஸ்கூட்டரை நிறுத்தாமல் அவரை இழுத்துக் கொண்டே சென்றுள்ளார். 


மடக்கி பிடித்த பொதுமக்கள் 

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த சாலையில் பைக்கில் வந்த மற்றொரு நபர், ஆட்டோவின் உதவியுடன் முதியவரை இழுத்துச் சென்ற இளைஞரின் ஸ்கூட்டரை நிறுத்தி உள்ளனர். 

முதியவரை ஸ்கூட்டரில் தரதரவென்று இழுத்து சென்ற இளைஞர்: ஆத்திரமூட்டும் வீடியோ | Man Being Dragged Behind A Scooter On Bengaluru

அங்கு கூடியவர்களிடம் மொத்த சம்பவத்தையும் கூறிய அந்த முதியவர், காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த இரக்கமற்ற செயலை செய்த இளைஞர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  மேலும் இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.