தமிழகத்தில் இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணிபுரியும் அறநிலையத் துறை ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் “தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கும்போது திருக்கோயில்களில் பணியாளர்களுக்கும் அகவிலைப்படி உயர்வினை இந்து சமய அறநிலை துறை ஆணையரே வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருக்கோயில் பணியாளர்களுக்கு தமிழக அரசின் அரசாணைப்படி திருத்திய ஊதிய விகிதம் மற்றும் இதரப்படிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த அரசாணை கடிதத்தில் ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு மேல் ஊதிய தொகை நிர்ணய வருமானம் பெறும் திருக்கோயில்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 01/07/2022 முதல் அகவிலைப்படியினை 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்பட அனுமதி வழங்கப்பட்டது.
தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தமிழ்நாடு மாநில அரசு பணியாளர்களுக்கு 01/01/2023 முதல் அகவிலைப்படி 4 விழுக்காடுகள் உயர்வு செய்யப்பட்டு 38 விழுக்காடாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே பார்வையில் காணும் அரசு கடிதம் மற்றும் அரசாணையின்படி ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு மேல் ஊதிய தொகை நிர்ணயம் வருமானம் பெற்று திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் நிரந்தர திருக்கோயில் பணியாளர்களுக்கு 01/01/2023 முதல் அகவிலைப்படியினை 34 விழுக்காட்டில் இருந்து 4 விழுக்காடு உயிர்வு செய்யது 38 விழுக்காடாக வழங்கிட அனுமதி வழங்கப்படுகிறது” என தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையின் மூலம் தமிழக அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணிபுரிந்து வரும் நிரந்தர பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.