பெற்றோரிடம் மகன்களுடன் ஆசீர்வாதம் வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். பொங்கல் பண்டிகை கொண்டாடியது குறித்து சில புகைப்படங்களுடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “உங்களுக்கும், உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் மறக்க முடியாத ஒரு பொங்கலாக இருக்கும் என நினைக்கிறேன். மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்புடன் இருக்க கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

பொங்கல் வைத்தது, மாட்டுக்கு பொங்கல் வைத்து வணங்கியது, மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் பெற்றோர் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் ஆகியோரிடம் ஆசீர்வாதம் வாங்கியது உள்ளிட்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில் ஐஸ்வர்யாவின் கணவர் தனுஷ் இடம் பெறவில்லை. இருவரும் பிரிந்தனர் என்று சொல்லப்பட்டாலும் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டனர் என்றுதான் செய்திகள் வெளிவந்தன. ஆனால், பொங்கல் கொண்டாட்டத்தில் தனுஷ் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது. அந்தப் புகைப்படங்களில் தனுஷ் இல்லாதது வருத்தமாக உள்ளது என அவரது ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.