முகேஷ் அம்பானி இளைய மகன் நிச்சயதார்த்தம்| Mukesh Ambanis youngest son is engaged

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் நடந்தது.

‘ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்’ அதிபர் முகேஷ் அம்பானி – நீத்தா அம்பானி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இதில் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் விரேன் மெர்ச்சன்ட் மகள் ராதிகா மெர்ச்சன்டுக்கும் திருமணம் செய்ய, 2019ல் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமண நிச்சயதார்த்தம், மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் பிரமாண்ட பங்களாவான, ‘ஆன்டிலியா’வில் நடந்தது. இந்த நிச்சயதார்த்த நிகழ்வில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.