தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலையில், பலவகையான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றது. இதனால், பொதுமக்கள் அனைவரும் குழப்பத்திலேயே இருந்து வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 35 ரூபாய் உயர்ந்து 5290 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 280 ரூபாய் உயர்ந்து 42, 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,560க்கும், கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.74.30க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.