சிவகங்கை: இந்திய தேசிய லீக் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் சிவகங்கையில் நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்ட மாநில தலைவர் பஷீர் அகமது அளித்த பேட்டியில், ‘‘சிறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுபான்மையினர் 33 பேர் உள்பட 700 பேர் உள்ளனர். ஆதிநாதன் குழு பரிந்துரையின் அடிப்படையில் 700 பேரையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றிக்காக இந்திய தேசிய லீக் பாடுபடும்’’ என்றார்.
