பிரித்தானியாவின் பக்கிங்ஹாம் ஷையரில் உள்ள M40 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் 12 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
வாகன விபத்து
பிரித்தானியாவில் பக்கிங்ஹாம்ஷையரில் உள்ள M40 நெடுஞ்சாலையில் இன்று காலை வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
பக்கிங்ஹாம்ஷையரில் உள்ள நெடுஞ்சாலையில் சந்திப்பு 5 மற்றும் 4 க்கு இடையில் தெற்கு நோக்கி நடந்த இந்த விபத்து சம்பவத்தில் 60 வயதுடைய பெண்ணும் 70 வயதுடைய ஆணும் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து Thames Valley காவல்துறைக்கு இன்று காலை 8.15 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
PA
இதில் இரண்டு பேர் வரை உயிரிழந்த நிலையில், மேலும் இரண்டு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
10 பேர் லேசான காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் துப்பறியும் தலைமை ஆய்வாளர் மைக் பெட்டிங்டன் வெளியிட்ட குறிப்பில், “இறந்த இருவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் காவல்துறை துணை நிற்கும்.” என தெரிவித்துள்ளார்.
PA
பயணிகளுக்கு வேண்டுகோள்
இந்நிலையில் வாகன விபத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது டாஷ்கேம் காட்சிகள் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தெற்கு மற்றும் வடக்கு நோக்கிச் செல்லும் பாதை மூடப்பட்டது, பயணிகள் மாற்று பாதையை பயன்படுத்துமாறு பொலிஸாரால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தெற்கு நோக்கி செல்லும் பாதை மூடப்பட்டு உள்ளது, வடக்கு நோக்கிய பாதை காலை 11.20 மணியளவில் மீண்டும் திறக்கப்பட்டது.
sky news