ரூ. 50,000 ஜீவனாம்சம் பத்தாது., முகமது ஷமியை பிரிந்த மனைவி ஆவேசம்


இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி அவரது பிரிந்த மனைவிக்கு மாதம் ரூ. 50,000 ஜீவனாம்சம் வழங்கவேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனைவிக்கு ஆதரவாக தீர்ப்பு

குடும்ப வன்முறை வழக்கில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் பிரிந்த மனைவிக்கு ஆதரவாக கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முகமது ஷமியை பிரிந்த மனைவி ஹசின் ஜஹான் மற்றும் மகளுக்கு மாதம் ரூ.1.30 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ. 50,000 ஜீவனாம்சம் பத்தாது., முகமது ஷமியை பிரிந்த மனைவி ஆவேசம் | Alimony Rs 50000 Per Month Mohammed Shami Wife

ரூ. 50,000 ஜீவனாம்சம் பத்தாது

ரூ.1.30 லட்சத்தில் ரூ.50,000 ஹசின் ஜஹானின் தனிப்பட்ட ஜீவனாம்சமாகவும், மீதமுள்ள ரூ.80,000 அவருடன் தங்கியிருக்கும் மகளின் பராமரிப்புச் செலவாகவும் இருக்கும்.

ஆனால், தனது தனிப்பட்ட செலவுகளுக்காக மாதம் ரூ.50,000 ஜீவனாம்சம் என்பது பத்தாது என ஹசின் ஜஹான் கூறியுள்ளார். ஷமியின் வருமானத்தை ஒப்பிடுகையில் இந்த தொகை மிகவும் குறைவு என்பதால் இந்துவாழக்கை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக ஹசின் தெரிவித்துள்ளார்.

ரூ. 50,000 ஜீவனாம்சம் பத்தாது., முகமது ஷமியை பிரிந்த மனைவி ஆவேசம் | Alimony Rs 50000 Per Month Mohammed Shami WifeAP

ஷமி மீது புகார்

இந்திய கிரிக்கெட் அணியின் சிறப்பான பந்துவீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி மீது, அவரது மனைவி ஹசின் ஜஹான் பல்வேறு புகார்களை தெரவித்தார். ஷமி வரதட்சனை கேட்டு புண்படுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்னை தாக்கியதாகவும் காவல்நிலையத்தில் பாலியல் மற்றும் குடும்ப வன்முறை பிரிவுகளில் புகார் அளித்தார்.

ஆனால் ஹசின் ஜஹானின் தொடர் புகார்களுக்கு முகமது ஷமி மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் முகமது ஷமி – ஹாசின் ஜஹான் விவகாரத்து கோரிய வழக்கு கொல்கத்தா குடும்பநல நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

ரூ.10 லட்சம் ஜீவனாம்சம் வேண்டும் 

ரூ. 50,000 ஜீவனாம்சம் பத்தாது., முகமது ஷமியை பிரிந்த மனைவி ஆவேசம் | Alimony Rs 50000 Per Month Mohammed Shami Wife

2018-ல் தொடரப்பட்ட இந்த வழக்கில் ஹாசின் ஜஹான் மாதாந்திர ஜீவனாம்சம் ரூ.10 லட்சம் வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார், அதில் ரூ.7 லட்சம் தனது தனிப்பட்ட ஜீவனாம்சமாகவும் மற்றும் மீதமுள்ள ரூ.3 லட்சம் அவர்களின் மகள் பராமரிப்பு செலவுக்காக வழங்கவேண்டும் என கோரியிருந்தார்.

2020-21 நிதியாண்டிற்கான இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமியின் வருமான வரிக் கணக்கின்படி, அவரது ஆண்டு வருமானம் ரூ. 7 கோடிக்கு மேல் இருந்ததாகவும், அதன் அடிப்படையில் ரூ.10 லட்சம் ஜீவனாம்சம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவரது வழக்கறிஞர் மிருகங்கா மிஸ்திரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா நீதிமன்றம் முகமது ஷமி, பிரிந்த மனைவி ஹசின் ஜஹானுக்கு மாதாந்திர ஜீவனாம்சமாக ரூ.1.30 லட்சம் வழங்க உத்தரவிட்டது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.