திருநெல்வேலி மாவட்டத்தில் வாலிபர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் குறிச்சிகுளம் பகுதியில் இன்று காலை வாலிபர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் மட்டும் கிடந்துள்ளது. இதைப் பார்த்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்து இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு அதன் வாலிபரின் தலையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து வாலிபரின் தலை சிறிது தூரத்திலேயே கிடந்துள்ளது. இந்நிலையில் வாலிபரின் உடல் மற்றும் தலையைக் கைப்பற்றிய போலீசார் நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீஸ் ஆர் விசாரணை மேற்கொண்டதில் அந்த வாலிபர் அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் வெள்ளியப்பன் என்ற துரை (30) என்பதும், வெளியூரில் வேலை பார்த்து வந்த துரை திருவிழாவிற்காக நேற்று சொந்த ஊர் வந்ததும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து, துரையை தலைத் துண்டித்து கொடூரமாக கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.