ஒரே பிரசவத்தில் பிறந்த அமெரிக்க பிரபலம் நாடியா சுலேமானின் 8 குழந்தைகள் 14வது பிறந்தநாளை கொண்டாடினர்.
ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகள்
அமெரிக்க ஊடக பிரபலமான நாடியா சுலேமான் கடந்த 2009ஆம் ஆண்டு, ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகளை உயிருடன் ஈன்றெடுத்து உலகளில் கவனிக்கப்பட்டார்.மேலும் அதன் மூலம் கின்னஸ் சாதனை ஒன்றையும் நிகழ்த்தினார்.
@Mediapunch/Shutterstock
இவ்வாறு அதிக எண்ணிக்கையில் ஒரே பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருக்கும் என்பதால், அவர்கள் நீண்ட நாள் உயிருடன் இருக்கமாட்டார்கள் என்று மருத்துவ உலகில் கூறப்படுவதுண்டு.
ஆனால், நாடியா விடயத்தில் அது மாறியுள்ளது.
அதாவது அவருடைய 8 குழந்தைகள் தங்கள் 14வது பிறந்தநாளை ஒன்றாக கொண்டாடினர். இது உலகளவில் ஆச்சரியமான விடயமாக பார்க்கப்படுகிறது.
@MOVI Inc
14 குழந்தைகள்
நாடியாவுக்கு ஏற்கனவே 6 குழந்தைகள் இருந்த நிலையில் தான் கர்ப்பமாகி மேலும் 8 குழந்தைகளுக்கு தாயானார்.
2008ஆம் ஆண்டு கணவரை Marcos Gutierrez-யை விவாகரத்து செய்த நாடியா, தற்போது தனது 14 குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.
ஆனால், தனக்கு இரட்டை குழந்தை தான் பிறக்கும் என்று நினைத்ததாலும், மருத்துவரால் தவறாக வழி நடத்தப்பட்டதாகவும் முன்பு நாடியா கூறியிருந்தார்.
தாய் குறித்து கூறும் குழந்தைகள்
இந்த நிலையில், நாடியா சுலேமானின் மகள் அமேரா கூறுகையில், ‘அவள் இப்போது 10 ஆண்டுகளாக எங்கள் குடும்பத்திற்காக போராடுகிறாள். என்ன செய்தாலும் அவள் கைவிட மாட்டாள், அது எனக்கு தெரியும்’ என தெரிவித்துள்ளார்.
அதேபோல் மகன் ஜோஷுவா, ‘பல உடன்பிறப்புகள் இருப்பது அதன் நன்மைகளைக் கொண்டுள்ளது. எனது நண்பர்களில் சிலருக்கு உடன்பிறந்தவர்கள் இல்லை.
எனவே அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை அறிய விரும்புகிறார்கள். விளையாடுவதற்கு யாராவது இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் சில சமயங்களில் அது அதிகமாக இருக்கும்’ என தனது சகோதர, சகோதரிகள் குறித்து கூறியுள்ளார்.
@MOVI Inc
நாடியா சுலேமான் செய்த கின்னஸ் சாதனையை, ஹலிமா சிஸ்ஸே என்ற பெண் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்து முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
[F3OPC ]