மாலத்தீவுக்கு டூர் : ராஷ்மிகா பதிலடி

தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்தார் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று இருவரும் பதில் கொடுத்து வருகிறார்கள்.

சமீபத்தில் இருவரும் மாலத்தீவிற்கு சென்று வந்த போட்டோக்களை தனித்தனியாக பகிர்ந்தனர். அதையடுத்து அவர்கள் இருவரும் சேர்ந்து மாலத்தீவிற்கு ஜாலி டூர் சென்றதாகவும் சோசியல் மீடியாவில் செய்திகள் வைரலாகின. இதைவைத்து பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில் ராஷ்மிகாஅளித்துள்ள ஒரு பேட்டியில், சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் என்னை டார்கெட் செய்து ஏகப்பட்ட அவதூறுகள் பரவி வருகின்றன. இவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக அவ்வப்போது நான் விளக்கமும் கொடுத்து வருகிறேன். மேலும் பள்ளியில் படித்த காலத்தில் நான் யாருடனும் அதிகமாக சேர மாட்டேன். அதனால் என்னை திமிர் பிடித்தவள் என்று கூறுவார்கள். அதைக் கேட்டு தனியே உட்கார்ந்து அழுது கொண்டிருப்பேன். அப்போது என்னுடைய அம்மா, இந்த சின்ன விஷயத்துக்கெல்லாம் இடிந்து போய்விட்டால் எப்படி. இன்னும் வாழ்க்கையில் நிறைய தூரம் பயணிக்க வேண்டி உள்ளது. இதெல்லாம் ஒரு விஷயமே அல்ல என்று சொல்லி என்னை தேற்றி நம்பிக்கை கொடுப்பார்.

அதன் பிறகு தான் எனக்குள் தன்னம்பிக்கை வளர்ந்தது. எதற்கும் ஒரு எல்லை உண்டு. ஆனால் எல்லை மீறி என்னைப்பற்றி தவறான வதந்திகளை பரப்பினால் அதற்கு தக்க பதிலடி கொடுப்பேன். அதோடு விஜய் தேவரகொண்டா என்னுடைய நண்பர். அதனால் அவரோடு நான் டூர் சென்றால் அதில் என்ன தவறு உள்ளது. அது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் என்று தன்னை பற்றி விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் ராஷ்மிகா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.