மாரடைப்பின்போது உடலைப் பிரிந்த உயிர்… நரகத்துக்கு சென்று திரும்பிய நபரின் திகில் அனுபவம்


அமெரிக்கர் ஒருவர், மாரடைப்பு ஏற்பட்டபோது தனக்கு ஏற்பட்ட பயங்கர அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். 

நரகத்துக்குச் சென்ற ஆவி

அமெரிக்காவில் பாதிரியாராக பணியாற்றிவரும் Gerald Johnson என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் உயிர் காக்கும் சிகிச்சையளித்து அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளார்கள்.

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது, அவரது உயிர் அவரது உடலிலிருந்து பிரிந்து நரகத்திற்குச் சென்றதை தான் தெளிவாக உணர்ந்ததாக தெரிவித்துள்ளார் Gerald.

மாரடைப்பின்போது உடலைப் பிரிந்த உயிர்... நரகத்துக்கு சென்று திரும்பிய நபரின் திகில் அனுபவம் | A Dead Body During A Heart Attack

Image: TIKTOK

நரகத்தில் கேட்ட இசை

தனது ஆவி தனது உடலிலிருந்து பிரிந்தபோது, அது மேலே செல்லாமல், பூமியின் ஆழத்துக்குச் சென்றதை உணர்ந்தபோது, அங்குதான் நரகம் இருப்பதைத் தெரிந்துகொண்டாராம் Gerald.

நரகத்தின் ஒரு பகுதியில், நாம் பூமியில் கேட்கும் அதே இசை கேட்பதைக் கவனித்த Geraldக்கு ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது. அதுவும், பிரபல பாடகியான ரிஹானாவின் Umbrella என்ற பாடலையும், McFerrin என்னும் பாடகரின் Don’t Worry Be Happy என்னும் பாடலையும் தான் கேட்டதாகக் கூறும் Gerald, தீய ஆவிகள், பாடல்கள் மூலம் மக்களைக் கட்டுப்படுத்துவதை தான் புரிந்துகொண்டதாகத் தெரிவிக்கிறார்.

மாரடைப்பின்போது உடலைப் பிரிந்த உயிர்... நரகத்துக்கு சென்று திரும்பிய நபரின் திகில் அனுபவம் | A Dead Body During A Heart Attack

Image: Getty Images/iStockphoto

நாய் போல் நடந்த மனிதன்

ஓரிடத்தில், தலையிலிருந்து கால் வரை தீப்பற்றி எரியும் நிலையில், கண்கள் வெளியே பிதுங்கி நிற்க, ஒரு மனிதன் நாய் போல நான்கு கால்களில் நடப்பதையும், அவனுடைய கழுத்தில் கட்டப்பட்டிருந்த சங்கிலியைப் பிடித்து தீய ஆவி ஒன்று அவனை அழைத்துச் சென்றதையும் கண்டுள்ளார் Gerald.

தான் வாழும்போது நன்மைகள் செய்ததையும், பலருக்கு உதவிகள் செய்ததையும், வாழ்வின் பல கட்டங்களில் நல்ல முடிவுகளையும் எடுத்துள்ளதையும் நினைத்தால், தான் இறந்தால் சொர்க்கத்துக்குத்தான் போவேன் என்று நம்பிக்கொண்டிருந்த நிலையில், தான் நரகத்துக்குச் சென்றது தன்னை அதிர்ச்சியடையவைத்ததாக தெரிவிக்கிறார் அவர்.

ஆனால், தனக்கு தீமை செய்தவர்களைத் தான் மன்னிக்காமல் இருப்பதை உணர்ந்த Gerald, அதுவும் தவறுதான் என உணர்ந்ததாக தெரிவிக்கிறார்.

மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையாகிய Gerald மாரடைப்பு வந்து அவரது உயிர் பிரிந்த நிலையில் மருத்துவர்கள் போராடி அவரது உயிரை மீட்க, தற்போது அமெரிக்காவின் Austinஇல் பாதிரியாராக பணியாற்றிவருகிறார் அவர்.
 

மாரடைப்பின்போது உடலைப் பிரிந்த உயிர்... நரகத்துக்கு சென்று திரும்பிய நபரின் திகில் அனுபவம் | A Dead Body During A Heart Attack

image: TIKTOK



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.