பாரிஸ் உங்களை வரவேற்கிறது! முதல் தேர்தலிலேயே ஜனாதிபதியான முன்னாள் ராணுவ தலைவருக்கு மேக்ரான் வாழ்த்து


செக் குடியரசின் புதிய ஜனாதிபதிக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல்

கடந்த சனிக்கிழமை அன்று செக் குடியரசில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ராணுவ தலைவர் பீட்டர் பாவெல் வெற்றி பெற்றார்.

அவர் முதல் முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுள்ளார். நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான வலுவான ஆதரவு மற்றும் உக்ரைனுக்கான உதவிக்கான ஆதரவைக் கொண்ட ஒரு பிரச்சாரத்தை அவர் மேற்கொண்டார்.

61 வயதான பாவெல் 58 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பீட்டர் பாவெல்/Petr Pavel

@APA

மேக்ரான் வாழ்த்து

இந்த நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் செக் குடியரசின் புதிய ஜனாதிபதி பாவெலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘செக் குடியரசின் தலைவராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜெனரல் பாவெல்!

நமது நாடுகள் ஆழமான ஐரோப்பிய மதிப்புகள் மற்றும் உக்ரைனுக்கு ஆதரவாக பிணைக்கப்பட்டுள்ளன. நீங்கள் பாரிஸில் வரவேற்கப்படுகிறீர்கள்’ என தெரிவித்துள்ளார்.     

இமானுவல் மேக்ரான்/Emmanuel Macron

@Reuters



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.