எல்லையில் குவிக்கப்படும் அதிகப்படியான படைகள்: மேற்கு நாடுகளின் மீது தாக்குதல் நடத்த தயாராகும் புடின்


போரின் ஆண்டு நிறைவை முன்னிட்டு மேற்கு நாடுகள் மீது விளாடிமிர் புடின் தாக்குதல் நடத்துவார் என உக்ரைனின் மூத்த அதிகாரிகள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.

உக்ரைனில் குவியும் படைகள்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் மீதான படையெடுப்பை தொடங்கி ஓராண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், லுஹான்ஸ்க் முதல் டொனெட்ஸ்க் வரையிலும், சபோரிஜியா மற்றும் கெர்சன் முழுவதும் ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டு வருவதை செயற்கைகோள் படங்கள் காட்டுகின்றன என்று உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எல்லையில் குவிக்கப்படும் அதிகப்படியான படைகள்: மேற்கு நாடுகளின் மீது தாக்குதல் நடத்த தயாராகும் புடின் | Putin Will Launch Strike On West Ukraine WarnsGetty Images

உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளரான Oleksiy Danilov, இந்த படை குவிப்பின் மூலம் பிப்ரவரி 24ம் திகதி ரஷ்ய ஜனாதிபதி புடின் பெரிய தாக்குதலுக்கு ஒன்றை திட்டமிடுகிறார் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று கருதுவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேற்கத்திய நாடுகளின் தொடர்ச்சியான ஆயுத நன்கொடைகளை தொடர்ந்து, ரஷ்ய ஜனாதிபதி புடின் வலுவான தாக்குதலுக்கு அஞ்சுவதாகவும் தெரிகிறது, அவை கூட எல்லைகளில் படைகளை குவிக்க காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் டெய்லி பீஸ்டிடம் புலனாய்வு ஆய்வாளர் பிராடி அஃப்ரிக் தெரிவித்த தகவலில், அவர்கள் அடிப்படையில் தங்கள் ஆதாயங்களை ஒருங்கிணைத்து, இதுவரை அவர்கள் வைத்திருக்கும் பகுதிகளை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

எல்லையில் குவிக்கப்படும் அதிகப்படியான படைகள்: மேற்கு நாடுகளின் மீது தாக்குதல் நடத்த தயாராகும் புடின் | Putin Will Launch Strike On West Ukraine WarnsShutterstock

மேற்கு நாடுகள் மீது தாக்குதல்

போரில் உக்ரைனுக்கு ஆதரவாக டாங்கிகளை வழங்கிய 12வது நாடாக கனடா உறுதியளித்ததை தொடர்ந்து, நோட்டோ மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக புடின் போரை நடத்துவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்புத் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி நடவடிக்கை சேவையின் பொதுச்செயலாளர் ஸ்டெபானோ சன்னினோ, போர் நடவடிக்கைகள் ஒரு கட்டத்தில் இருந்து மற்றொரு கட்டத்திற்கு மாறுவதற்கான நேரம் இப்போது வந்துவிட்டது.

எல்லையில் குவிக்கப்படும் அதிகப்படியான படைகள்: மேற்கு நாடுகளின் மீது தாக்குதல் நடத்த தயாராகும் புடின் | Putin Will Launch Strike On West Ukraine WarnsGetty Images

மாஸ்கோ விரைவில் தங்கள் கவனத்தை மேற்கு நாடுகளுக்கு மாற்றக்கூடும் என்பதை அறிந்த போலந்து, ஸ்பெயின் நார்வே மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் அனைத்தும் உக்ரைனுக்கு கணிசமான இராணுவ உதவியை வரவிருக்கும் நாட்களில் செய்யும் என்று சன்னினோ குறிப்பிட்டுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.