அமெரிக்கா மீது பறந்த உளவு பலூன்..திடீர் முடிவெடுத்த வெளியுறவு அமைச்சர்


சீனாவின் உளவு பலூன் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சீன பயணத்தை ஒத்தி வைப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உளவு பலூன்

அமெரிக்காவின் அணுசக்தி ஏவுதளம் அமைந்துள்ள மொன்டானா பகுதியில், சீனாவின் உளவு பலூன் பறப்பது கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாடு முழுவதும் இந்த விவகாரம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்கா – சீனா நாடுகளுக்கு இடையேயான தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், வெளியுறவு அமைச்சர் ஆண்டனி
பிளிங்கன் திட்டமிட்டிருந்தார்.

ஆண்டனி பிளிங்கன்/Antony Blinken

@Getty Images


வெளியுறவு அமைச்சரின் பயணம்

ஆனால் உளவு பலூன் பறந்த விவகாரம் காரணமாக அவர் தனது பயணத்தை ரத்து செய்வதாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் மத்திய வெளியுறவுத்துறை அலுவலக இயக்குனர் வாங் யீயிடம் தொலைபேசியில் பிளிங்கன் பேசும்போது,

‘பலூன் ஒரு பொறுப்பற்ற செயல் மற்றும் பயணத்தின் நோக்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அமெரிக்க இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தின் தெளிவான மீறல்’ என்று கூறினார்.

சீன வெளியுறவு அமைச்சர் குயின் கேக் மற்றும் ஜி ஜின்பிங் ஆகியோரை பிளிங்கன் சந்திக்க திட்டமிட்டிருந்தார்.     

அமெரிக்கா மீது பறந்த உளவு பலூன்..திடீர் முடிவெடுத்த வெளியுறவு அமைச்சர் | Secretary Of State Postpones Us Trip Spy Balloon

 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.