வேங்கை வயல் கிராமத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மருத்துவ முகாம் நிகழ்வை துவங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சிக்கு பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “காரைக்குடி அருகில் தன்னுடைய இல்லத்தில் வைத்திருந்த பெரியார் சிலையை ஒரு நபர் அப்புறப்படுத்துவது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.
பட்டியலின மக்களுக்கு அரசாங்கம் எதிராக செயல்பட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. குற்றவாளிகளை கண்டிப்பதால் ஆட்சிக்கு பாதிப்புகள் ஏற்படாது. ஆனால், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் கோரிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி வைக்கின்றது.
இந்த பிரச்சனையை தொடக்கத்தில் இருந்து விசிக தான் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இந்த நிகழ்ச்சி தெரிந்தவுடன் ஆர்ப்பாட்டத்தை முதலில் நடத்தியது விசிக தான் கூட்டணியில் இருந்து கொண்டே அரசுக்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்களை நடத்தி இருக்கிறோம். பெரியார் மண் என்று சொல்லக்கூடாது என சீமான் கூறுகிறார்.
அவர் திராவிட இயக்கத்தின் மீதான நிலைப்பாட்டில் தான் பேசுகிறார். ஏனென்றால், அதுதான் அவருடைய அரசியல். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பது என்பதை விட தனக்கு அரசியல் முன்னேற்றத்தை கொடுக்கும் விஷயங்களை அவர் எடுத்து பேசுகின்றார் இதற்கெல்லாம் நான் பதில் கூற முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.