Vani jayaram: அந்த சம்பவத்திற்கு பிறகு எனக்கு வாழ்வதற்கு தெம்பில்லை..உருக்கமாக பேசிய வாணி ஜெயராம்..!

கலைவாணி என்ற இயற்பெயரை கொண்ட வாணி ஜெயராம் கலைத்துறையில் பல ஆண்டுகாலம் கொடிகட்டி பறந்தார். இசை குடும்பத்தில் பிறந்த வாணி ஜெயராம் இயல்பிலேயே இசையின் மீது ஆர்வம் கொண்டவராக இருந்தார்.

இதையடுத்து 1974 ஆம் ஆண்டு வெளியான தீர்க்கசுமங்கலி என்ற படத்தில் இடம்பெற்ற மல்லிகை என் மன்னன் மயங்கும் என்ற பாடலின் மூலம் திரைத்துறையில் பாடகியாக அறிமுகமானார் வாணி ஜெயராம். அதன் பின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் வாணி ஜெயராம்.

Run baby run: சீரியசான ரோலில் சிக்ஸர் அடித்தாரா ஆர்.ஜெ.பாலாஜி ?வெளியான ரன் பேபி ரன் விமர்சனம்..!

மேலும் தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில் 78 வயதான வாணி ஜெயராம் நேற்று காலமானது திரையுலகை சார்ந்த பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு தன் கணவரை பிரிந்த வாணி ஜெயராம் அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகின்றது.

கணவரின் மீது அதீத காதல் கொண்டவர் தான் வாணி ஜெயராம். எங்கு சென்றாலும் தன் கணவருடன் சென்று வந்த வாணி ஜெயராம் அவரின் மறைவிற்கு பிறகு மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார்.

இந்நிலையில் தன் கணவர் மறைவிற்கு பிறகு ஒரு பேட்டியில் பேசிய வாணி ஜெயராம், என் கணவரின் மறைவிற்கு பிறகு வாழ்க்கையை வாழ்வதற்கான தெம்பை நான் இழந்தேன் என உருக்கமாக பேசியுள்ளார்.

மேலும் கணவரை இழந்த வாணி ஜெயராம் கடந்த சில ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.