உக்ரைன் மீதான அத்துமீறிய போர் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 700 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக உக்ரைன் ஆயுதப்படை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர்.
700 ரஷ்ய வீரர்கள்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் இன்னும் சில நாட்களில் ஓராண்டை கடக்க இருக்கும் நிலையில், உக்ரைன் எல்லை பகுதிகளில் ரஷ்யா கிட்டத்தட்ட 5,00,000 ராணுவ துருப்புகளை சமீபத்தில் மீண்டும் குவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கத்திய நாடுகளும் உக்ரைன் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்து சண்டையிட, உதவியாக டாங்கிகள், ஏவுகணைகள், போர் விமானங்கள் ஆகியவற்றை வழங்க முன்வந்துள்ளனர்.
“Winning – that’s the most important to me. It’s as simple as that.”
Cristiano Ronaldo @CristianoTotal combat losses of the enemy from Feb 24 to Feb 5: pic.twitter.com/s8sKpGKweQ
— Defense of Ukraine (@DefenceU) February 5, 2023
இந்நிலையில் உக்ரைன் மீதான அத்துமீறிய போர் தாக்குதல் தொடங்கிய நாள் முதல் இதுவரை சுமார் 1,31,290 ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக உக்ரைனிய ஆயுதப் படை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற தாக்குதலில் மட்டும் அதாவது கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைன் நடத்திய எதிர்ப்பு தாக்குதலில் மட்டும் சுமார் 700 வீரர் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
போர் ஆயுதங்கள்
அத்துடன் நேற்றைய தினம் ரஷ்யா கூடுதலாக இரண்டு டாங்கிகள், 11 ஆயுத கவச வாகனங்கள், 6 ஏவுகணை அமைப்புகள், 2 ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள், 2 தந்திரோபாய-நிலை ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் 10 டிரக்குகள் மற்றும் டேங்கர்கள் ஆகியவற்றை இழந்து இருப்பதாக உக்ரைனிய ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.