
சைலண்டாக நடந்து முடிந்த திருமணம் : பாண்டியன் ஸ்டோர்ஸ் மகேஷுக்கு குவியும் வாழ்த்துகள்
பிரபல தொலைக்காட்சி நடிகரான மகேஷ் சுப்பிரமணியம் ஆங்கராக தனது கேரியரை ஆரம்பித்து இன்று வளர்ந்து வரும் நடிகராக பரிணமித்துள்ளார். விஜய் டிவியின் 'பகல் நிலவு', 'கடைக்குட்டி சிங்கம்', 'ராசாத்தி' ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்ர். அண்மையில், விஜய் டிவியின் ஹிட் தொடரான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் என்ட்ரி கொடுத்து கவனம் ஈர்த்தார். வெள்ளித்திரையிலும் 'தூக்குத்துரை' என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.
சில தினங்களுக்கு முன் திடீரென தனது திருமண வரவேற்பிற்கு ரெடியாகும் வீடியோவை வெளியிட்டிருந்தார். அப்போதே ரசிகர்கள் பலர் மகேஷுக்கு திருமணமா என ஆச்சரியத்தில் மூழ்கினர். இந்நிலையில், இன்றைய தினம் மகேஷ் சுப்பிரமணியத்துக்கு பிரேமலதா என்ற பெண்ணுடன் பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர் புடைசூழ கோலாகலமாக திருமணம் முடிந்துள்ளது. சோஷியல் மீடியாவில் அவரது திருமண வீடியோ வைரலாகி வரும் நிலையில் பலரும் மகேஷின் திருமணத்துக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.