டெல்லி : நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது 2004 முதல் 2014 வரையிலான ஆட்சிக் காலத்தில் அதிகளவில் ஊழல் நடந்ததாக பிரதமர் மோடி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.
