சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவுபடி எடப்படி தரப்பு வேட்பாளரே அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக ஓபிஎஸ் பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையத்தில் அதிமுக தரப்பில் வழங்கப்பட்டுள்ள பிரசாரகர்களின் பட்டியலில் ஓபிஎஸ் தரப்பு பெயர் பட்டியல் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி கொடுத்துள்ள பட்டியல் மட்டுமே ஏற்கப்பட்டு உள்ளது. இது ஓபிஎஸ்-க்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் பொதுக்குழு உறுப்பினர்களிடம் […]
