ஆயில் டேங்க்கை சுத்தம் செய்ய இறங்கிய 7 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி பலி!

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில், எண்ணெய் தொழிற்சாலையின் ஆயில் டேங்க்கை சுத்தம் செய்ய இறங்கிய கூலித்தொழிலாளர்கள் 7 பேர், விஷவாயு தாக்கியதில் மூச்சு திணறி உயிரிழந்தனர்.

பெத்தாபுரம் அருகே கட்டுமானத்தில் உள்ள எண்ணெய் தொழிற்சாலையில், தரைக்கு அடியில் புதைக்கப்பட்ட ஆயில் டேங்க்கை சுத்தம் செய்ய 7 தொழிலாளர்கள் உள்ளே இறங்கியுள்ளனர்.

ஏற்கனவே பயன்பாட்டில் இருந்ததாக கூறப்படும் டேங்கில், எண்ணெய் கசடுகளில் இருந்து விஷவாயு வெளியேறிய நிலையில், தொழிலாளர்கள் மயங்கி விழுந்துள்ளனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் டேங்கினுள் இறங்கிய சிலர், தொழிலாளர்களை மீட்ட நிலையில், 7 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.