திருவனந்தபுரம்: கேரள சட்டசபை கூட்டத்தில் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை முதல்வர் பினராயி விஜயன் முன்னிலையில் நிதி அமைச்சர் கே.என். பாலகோபால் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதில் ரூ.3 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் வகையில் புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரள பட்ஜெட்டில் உயர்த்தப்பட்ட வரியை திரும்ப பெற வலியுறுத்தி கோட்டயம் ஆட்சியர் அலுவலகம், கணையனூர் தாலுகா அலுவலகம் முன், இன்று(பிப்.,09) பாஜ., மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களை தண்ணீர் பீய்ச்சி அடித்து கலைக்கும் பணியை கேரள போலீசார் ஈடுபட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement