கனடாவில் பராமரிப்பு நிலையத்தின் மீது பேருந்து மோதி விபத்து: ஆடைகளை கழட்டி ஓட்டுநர் கூச்சலிட்டதால் பரபரப்பு


கனடாவில் ஓட்டுநர் ஒருவர் பகல் நேரப் பராமரிப்பு நிலையத்தின் மீது பேருந்தை மோதி விபத்து ஏற்படுத்தியதில் 2 குழந்தைகள் வரை உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இரண்டு குழந்தைகள் பலி

கனடாவின் கியூபெக், லாவல் நகரில் காலை 8:30 மணியளவில் பேருந்து ஒன்று பகல்நேர பராமரிப்பு நிலையத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது.

இந்த பேருந்து விபத்து ஓட்டுநரால் வேண்டுமென்றே நடத்தப்பட்டதாகவும், குழந்தைகள் பேருந்தின் அடியில் சிக்கிக் கொண்டிருந்த போது, ஓட்டுநர் பியர் நை செயின்ட்-அமண்ட் (Pierre Ny St-Amand,51) முரட்டு தனமாக கூச்சலிட்டு ஆடைகளை கழற்றியதாக அங்கிருந்த சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மற்றொரு சாட்சி வழங்கிய தகவலில், பேருந்து மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் சென்று கொண்டிருந்தது என்றும், “நான் பார்த்ததில் இது விபத்து அல்ல” என்றும் தெரிவித்துள்ளார்.

கனடாவில் பராமரிப்பு நிலையத்தின் மீது பேருந்து மோதி விபத்து: ஆடைகளை கழட்டி ஓட்டுநர் கூச்சலிட்டதால் பரபரப்பு | Canada Driver Stripped Naked After Crashing BusShutterstock

இந்த சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர், மேலும் காயமடைந்த 12 பேர்களுடன் எட்டு குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

பொலிஸார் விசாரணை

பகல்நேர பராமரிப்பு நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் வேண்டுமென்றே நடத்தப்பட்டது என சாட்சிகள் குறிப்பிட்டு வரும் நிலையில் பொலிஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கனடாவில் பராமரிப்பு நிலையத்தின் மீது பேருந்து மோதி விபத்து: ஆடைகளை கழட்டி ஓட்டுநர் கூச்சலிட்டதால் பரபரப்பு | Canada Driver Stripped Naked After Crashing BusFacebook

மேலும் பேருந்து ஓட்டுநர் செயின்ட்-அமண்ட் கொலை மற்றும் ஆபத்தான வாகனம் ஓட்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அத்துடன் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு சிறப்பு பொலிஸார் ஆதரவு வழங்கி வருவதாக தெரிவித்துள்ளனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.