ஈரோடு: ஈரோடு வேப்பம்பாளையத்தில் அதிமுக பிரசாரக் கூட்டத்தில் சிறுமியிடம் அதிமுக பிரமுகர் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அத்துமீறலில் ஈடுபட்ட அதிமுக பிரமுகரை சிறுமியின் தாயார் ஆவேசமாக தாக்க முயன்று, கடுமையாக பேசியுள்ளார். இந்த இழிசெயலை செய்த பிரமுகரை சிறுமியின் தாயார் ஆவேசமாக தாக்க முயன்றதால் அவரை அதிமுகவினர் அக்கூட்டத்தைவிட்டு வெளியேற்றினர். பிரச்சார கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.
