கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள பாகிஸ்தானில் விரைவில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுகிறது.
கொரோனா, அதைத் தொடர்ந்து உக்ரைன் – ரஷ்யா போர் ஆகியவற்றால் உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் உணவுக்கே தட்டுப்பாடு என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கோதுமைக்காக பொதுமக்கள் ஒருவரை ஒருவரை அடித்துக்கொள்ளும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைத்துள்ளதால் இலங்கை போன்று பாகிஸ்தான் மாறும் சூழல் உள்ளது.
பாகிஸ்தானின் தற்போதைய அந்நிய செலாவணி கையிருப்பின் மூலம் 2 வாரங்கள் மட்டுமே உணவு தானியங்களையும், கச்சா எண்ணெய்யையும் இறக்குமதி செய்ய முடியும் எனக் கூறப்படுகிறது.
கராச்சி, லாகூர், பைசலாபாத் போன்ற முக்கிய நகரங்களில் பெட்ரோல் பங்குகளில் வாகனங்கள் நீண்டும் வரிசையில் காத்திருக்கும் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. ஆனால், இந்த தகவல்களை பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது.
அடுத்த 20 நாட்களுக்கு தேவையான பெட்ரோல் தற்போது கையிருப்பில் இருக்கிறது என்றும் தற்போதைய இந்த பெட்ரோல் பற்றாக்குறைக்கு காரணம் டீலர்கள்தான், அவர்கள் பெட்ரோலை பதுக்கிவைத்து லாபம் பார்க்கிறார்கள் எனவும் பாகிஸ்தான் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு மூன்று வாரத்துக்கு மட்டுமே வரும் என தகவல் வெளியாகியுள்ளதால், இலங்கை நிலைக்கு பாகிஸ்தான் செல்லும் நிலை தற்போது உருவாகியுள்ளது.
newstm.in