புதுடில்லி: தலைமை நீதீபதியுடன் சேர்த்து, 34 நீதிபதிகள் செயல்பட வேண்டிய உச்சநீதிமன்றத்தில், பிப்.,6ம் தேதி புதிதாக பதவியேற்ற நீதிபதிகளுடன் சேர்த்து, 32 நீதிபதிகள் இருந்தனர்.
இச்சூழலில், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஷ் பிண்டால், குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி அரவிந்த்குமார் ஆகியோரை, உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி சந்திரசூட் தலைமையிலான ‛கொலீஜியம்’ பரிந்துரைத்தது.
இந்நிலையில், கொலீஜியம் பரிந்துரையை ஏற்று 2 பேரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் என, சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். இதன்வாயிலாக, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பணியிடங்கள், முழுவதுமாக நிரப்பப்பட்டுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement