வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீ நகர்: கேலோ இந்தியாவின் குளிர்கால விளையாட்டுகள் இன்று (பிப்.,10) முதல் பிப்., 14ம் தேதி வரை ஜம்மு காஷ்மீரின் குல்பர்கில் நடைபெறுகிறது. மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறையின் ஆதரவுடன் ஜம்மு கஷ்மீர் விளையாட்டு கவுன்சில் மற்றும் குளிர்கால விளையாட்டு சங்கம் சார்பில் 3 வது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு நடத்தப்படுகிறது.

இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு போட்டிகள் இன்று துவங்கி பிப்.,14ம் தேதி வரை நடைபெறும். நாட்டில் 29 மாநிலங்களிலிருந்து 1500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதன் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு உருவாகும். மேலும் கேலோ இந்தியா விளையாட்டு நடைபெறும் இடத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வரத்து அதிகமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா கூறுகையில், இதன் மூலம் விளையாட்டு வீரர்கள் பயன் அடைவார்கள். இதனால் ஜம்மு காஷ்மீருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement