கர்நாடகா: 30 லட்சத்திற்கும் மேல் தமிழர்கள் வசிக்கும் பெங்களூரு நகரில் 3 சட்டமன்ற தொகுதிகளை தமிழர்களுக்கு ஒதுக்க வேண்டும் என பாஜக-விடம் அக்கட்சியின் தமிழர் குழு தலைவர் தன்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் தமிழர்கள் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், பாஜக சார்பில் இதுவரை ஒரு தமிழர் கூட தேர்வாகாத நிலை நீடிக்கிறது. இம்முறை பாஜக சார்பில் போட்டியிட பல தமிழர்கள் கட்சியிடம் விருப்ப மனு அளித்துள்ளன.
இந்நிலையில், பெங்களூர் நகரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் காந்திநகர், சாமூராஜ் நகர், சாந்தி நகர், புலிகேசி நகர் போன்ற தொகுதிகளில் குறைந்தது 3 இடங்களை தமிழர்களுக்கு ஒதுக்க வேண்டும் என பாஜக தமிழர் குழு தலைவர் தன்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். கர்நாடக மாநிலத்திற்கு தேர்தல் துணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கோரிக்கை மனு அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.