மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணி: மத்திய அமைச்சர் விளக்கம்| AIIMS Hospital Mission in Madurai: Union Minister Explained

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் நடந்து வருகிறது என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா என பார்லிமென்ட் லோக்சபாவில் கேள்வி பதிலளித்து பேசினார்.

latest tamil news

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணி தொடர்பாக, தமிழக எம்.பிக்கள் பார்லிமென்டில் இரு அவைகளிலும் தொடர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று(பிப்.,10) லோக்சபாவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் கேள்வி எழுப்பினர்.

அப்போது, இந்தியாவில் எத்தனை மருத்துவ கல்லூரிகள் போதிய உட்கட்டமைப்பு இல்லாமல் செயல்பட்டு வருகின்றன?. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டுமானப் பணிகள் ஏன் துவங்காமல் உள்ளது?. இதேபோன்று எத்தனை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன? திமுக எம்.பி டி.ஆர். பாலு கூறினார்.

latest tamil news

இதற்கு மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா லோக்சபாவில் விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவில் எந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் உட்கட்டமைப்பு இல்லாமல் செயல்படவில்லை. எய்ம்ஸ் விவகாரத்தை தேவையில்லாமல் தமிழக எம்பிக்கள் அரசியல் ஆக்குகின்றனர்.

போதிய ஆசிரியர்கள் மற்றும் உள்கட்டமைப்பு இல்லாத இடங்களில் மருத்துவக் கல்லூரிகள் இயங்க அனுமதிக்க மாட்டேன்; மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி நடந்து வருகிறது. சுகாதாரத்தை அரசியல் பிரச்சினையாக ஆக்காதீர்கள். இவ்வாறு அவர் பதிலளித்து பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.