
மீண்டும் கதை நாயகனான அஸ்வின்
சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த அஸ்வின் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அதன்பிறகு அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தது. 'என்ன சொல்ல போகிறாய்' என்ற படத்தில் நாயகனாக நடித்தார். இந்த படத்தின் விழாவில் '40 கதைகள் கேட்டு தூங்கிவிட்டேன்' என்று அவர் சொன்ன ஒரு வரி அவரது சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்டது. பலரும் அவரை கிண்டல் கேலி செய்ய வாய்ப்புகள் நின்று போனது.
அதன்பிறகு சமீபத்தில் வெளியான 'செம்பி' படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் கதையின் நாயகனாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தை அருள்நிதி நடித்த 'தேஜாவு' படத்தை இயக்கிய அரவிந்த் சீனிவாசன் இயக்குகிறார். ழென் ஸ்டூடியோ சார்பில் புகழ் தயாரிக்கிறார், ஆர்கா என்டெர்டெயின்ட்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. மற்ற நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது.