இந்தியாவில் முதல் முறையாக 5.9 மில்லியன் டன் லித்தியம் தாது இருப்பு கண்டுபிடிப்பு..!!

லித்தியம் என்பது இன்று உலகமே தேடி அழையும் ஒரு முக்கியக் கனிமம். உலகம் முழுவதும் எலக்ட்ரிக் கார்களைத் தயாரிப்பதில் தீவிரமாக இருக்கும் வேளையில் அதன் பேட்டரியை தயாரிப்பில் முக்கியக் கனிமம் லித்தியம். இரும்பு அல்லாத உலோகமான லித்தியம் செல்போன், லேப்டாப், டிஜிட்டல் கேமரா, மின்சார வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் பேட்டரியின் முக்கிய மூலப்பொருளாகும்.

இந்தியாவில் இதுவரை லித்தியம் கனிமம் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போதுவரை இந்தியா லித்தியம் பேட்டரிகளை சீனா, ஹாங்காங் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரியாசி மாவட்டத்தின் சலால்-ஹைமானா பகுதியில் 5.9 மில்லியன் டன்கள் கொண்ட லித்தியம் ஊகிக்கப்பட்ட வளங்கள் (ஜி3) முதன்முறையாக இந்திய புவியியல் ஆய்வு அமைப்பு கண்டுபிடித்துள்ளது என்று சுரங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் நாடு முழுவதும் சுமார் 51 கனிமத் தொகுதிகளைக் கண்டுபிடித்துள்ளது. இதில் 5 தொகுதிகள் தங்கம் உள்ளதாகவும், மற்ற கனிமத் தொகுதிகளில் பொட்டாஷ், மாலிப்டினம், அடிப்படை உலோகங்கள் போன்ற பொருட்கள் உள்ளது.

இந்த 51 கனிமத் தொகுதிகள் ஜம்மு மற்றும் காஷ்மீர், ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய 11 மாநிலங்களில் உள்ளது எனச் சுரங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தப் பகுதிகளில் இருக்கும் 51 கனிமத் தொகுதிகளில் லித்தியம், தங்கம் உள்ளிட்ட தாதுக்கள் உள்ளதாகவும், இதை அந்தந்த மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் முக்கியமாக லித்தியம் என்பது ஒரு இரும்பு அல்லாத உலோகம் மற்றும் EV பேட்டரிகளில் உள்ள முக்கியக் கூறுகளில் ஒன்றாகும்.

இதுவரையில் இந்திய புவியியல் ஆய்வு அமைப்பு லித்தியம் குறித்து எவ்விதமான அறிவிப்புகளை வெளியிடாத நிலையில் முதல் முறையாக அறிவித்துள்ளது. லித்தியம் சரங்கம், சுத்திகரிப்பு, தயாரிப்பு ஆகியவற்றில் அமெரிக்கா மற்றும் சீனா பெரும் போட்டியை போட்டு வரும் நிலையில் இந்தியாவும் இதில் சேர்ந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.