மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சிவராத்திரி அன்று சிறப்பு அபிஷேகம், ஆராதனை!

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சு சுந்தரரேசுவர் கோயிலில் மஹா சிவராத்திரி அன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் மஹா சிவராத்திரி உற்சவத்திற்காக வரும் 18-ம் தேதி இரவு முதல் கோயில் நடை திறந்திருக்கப்பட்டு அபிஷேகம் மற்றும் ஆராதனை 19.02.2023-ம் தேதி அதிகாலை வரை நடைபெறுகிறது. மேலும் அம்மன், சுவாமி மற்றும் உற்சவர் சன்னதிகளில் விடிய, விடிய அபிஷேக பொருட்கள் மூலம் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற உள்ளதாகவும். இதில் பொது மக்களும், சேவார்த்திகளும், பக்தப் பெருமக்களும், அபிஷேப் பொருட்களான பால், தயிர், இளநீர், பன்னீர் பழவகைகள் தேன், மஞ்சள் பொடி, எண்ணெய் நெய் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை 18-ம் தேதி மாலைக்குள் கோயில் நிர்வாகத்தில் வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், அதேபோல் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் உபகோயில்களில் மகாசிவாராத்திரி உற்சத்திற்கு அபிஷேக பொருட்கள் வழங்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் சிவராத்தி அன்று பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர்.

சிறப்பு பூஜை நடைபெறும் உப கோயில்கள் திருவாதவூர், திருமறைநாதசுவாமி திருக்கோயில், ஆமூர், அய்யம் பொழில் ஈஸ்வரர் திருக்கோயில், சிம்மக்கல், ஆதிசொக்கநாதர் திருக்கோயில், செல்லுார், திருவாப்புடையார் திருக்கோயில், தெப்பக்குளம், முக்தீஸ்வரர் திருக்கோயில், தெற்குமாசி வீதி, தென்திருவாலவாய சுவாமி திருக்கோயில், எழுகடல் காஞ்சனமாலையம்மன் திருக்கோயில், பேச்சியம்மன் படித்துறை, காசிவிஸ்வநாதர் திருக்கோயில், சுடுதண்ணீர் வாய்க்கால், கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறபு அபிஷேக ஆராதனை நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.