டெல்லி: டெல்லி- மும்பை விரைவுச் சாலையின் முதல் பகுதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். புதிய விரைவு சாலையின் மூலம் டெல்லி, ஜெய்ப்பூர் இடையேயான பயண நேரம் 2 மணி நேரமாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.1,386 கி.மீ. கொண்ட நாட்டின் மிக நீளமான விரைவுச் சாலை டெல்லி மற்றும் மும்பையை இணைக்கும்.
