காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டத்தை சேர்ந்த ஆதவபாக்கம் கிராம ஊராட்சி புதிய காலனியில் வசிப்பவர் வேங்கப்பன் (வயது 65). முதியவரான இவர் தனது உறவினர் இறப்பு நிழச்சிக்காக அருகில் உள்ள புலிவாய் கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது இறப்பு நிகழ்ச்சியில் தனது உறவினர்களுடன் மது அருந்தியபோது போதை தலைக்கேறியுள்ளது. அப்போது, அப்பகுதியை சேர்ந்த 14 வயதுடைய மனநலம் குன்றிய சிறுமி இருந்ததை பார்த்துள்ளார். போதையில் அந்த சிறுமியிடம் அத்துமீறி பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். அப்போது அப்பெண்னின் அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடி வந்த உடன் முதியவர் வேங்கப்பன் அப்பகுதியில் இருந்து தப்பியோடியுள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாகரல் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு ஏடிஎஸ்பி சந்திரசேகர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு, வேங்கப்பன் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய காவல் துறைக்கு அறிவுறுத்தினார். காவல்துறை தன் மீது வழக்கு பதிவு செய்துள்ளதை அறிந்த முதியவர் வேங்கப்பன் செய்வதறியாமல் பயத்தில் தற்கொலை முயற்சியினை மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து உத்திரமேரூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தற்போது மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மது போதையில் மனநலம் குன்றிய பெண்ணை முதியவர் பாலியல் வன்புணர்ச்சி செய்ததும், காவல்துறைக்கு பயந்து தற்கொலை முயற்சி செய்தததும் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.