மீண்டும் நயன்தாராவை சீண்டிய மாளவிகா மோகனன்

நடிகை மாளவிகா மோகனன் சில நாட்களுக்கு முன்பாக நடிகை நயன்தாரா குறித்து பேட்டி அளிக்கையில், ‛ரு படத்தில் மருத்துவமனை காட்சியில் நடித்தபோது முழு மேக்கப் உடன் தலை முடிகள் கூட கலையாமல் நயன்தாரா நடித்ததாக' விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து சமீபத்தில் வெளியான ‛கனெக்ட்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின்போது, நயன்தாரா கூறுகையில், ‛ரியலிஸ்டிக் படங்களுக்கும், கமர்சியல் படங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. நான் நடிப்பது கமர்சியல் படம் என்பதால்தான் அப்படி நடித்தேன். கமர்சியல் படத்தில் ஒரு ஹீரோயினின் தலையை விரித்து போட்டுக் கொண்டெல்லாம் மருத்துவமனைக்கு செல்ல முடியாது. அதோடு ஹீரோயின்கள் அதிக சோகமாகவும் இருக்கக்கூடாது. அதன் காரணமாகவே கமர்சியல் படங்களுக்கு தேவையான நடிப்பை நான் வெளிப்படுத்தி இருந்தேன்' என பதிலடி கொடுத்தார்.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் நடிகை மாளவிகாவிடம் லேடி சூப்பர் ஸ்டார் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மாளவிகா, “உண்மையாகவே எனக்கு அந்த வார்த்தையின் மீது நம்பிக்கையில்லை. பெண்களை சூப்பர் ஸ்டார் என அழைக்கலாம். லேடி சூப்பர் ஸ்டார் என்பதன் அவசியம் என்ன என எனக்குத்தெரியவில்லை. சூப்பர் ஸ்டார் என அழைத்தால் போதுமே. தீபிகா படுகோன், ஆலியா பட், கத்ரீனா ஆகியோர் சூப்பர் ஸ்டார்கள்தான். அதுமாதிரி அழைத்தால் போதுமே” எனக் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.